
நாடோடி சமூகத்தை சேர்ந்த மகாராஷ்டிரா பெண் ஒருவர், தன்னுடைய 38 வயத்திற்குள்ளாகவே 17 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 38 வயதான லங்காபாய் என்கிற கர்ப்பிணி பெண் கடந்த சில தினங்களுக்கு முன் கர்நாடகாவில் உள்ள கரும்பு தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது, பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
ஆனால் துரதிஷ்டவசமாக அந்த குழந்தை குழந்தை அடுத்த சில மணி நேரங்களில் உயிரிழந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவர் பவார் கூறுகையில், முதன்முறையாக லங்காபாய் கடந்த செப்டம்பர் 8ம் திகதியன்று பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்திருந்தார்.
அப்போது அவரது உடல்நிலை மோசமடைந்திருப்பது குறித்து கேட்டபோது தான், அவர் 20வது முறை கர்ப்பம் தரித்திருப்பது எங்களுக்கு தெரியவந்தது.

அவருக்கு தற்போது 9 மகள்கள் உட்பட 11 குழந்தைகள் உள்ளனர். மூன்று முறை கரு கலைந்துள்ளது. 5 குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டன.
அவரை பரிசோதனை செய்வதற்காக எங்கள் குழு நவம்பர் 21ம் திகதி அவருடைய வீட்டிற்கு சென்றது. ஆனால் அவர்கள் அங்கிருந்து கர்நாடகாவிற்கு சென்றிருந்தனர்.

தற்போது அவருக்கு 17வதாக ஒரு பெண் குழந்தை பிறந்து, இறந்திருப்பதை நாங்கள் அறிந்தோம். மேலும் அவரை பற்றியதகவல்களை தெரிந்துகொள்வதற்காக முயற்சித்து வருகிறோம் எனக்கூறியுள்ளார்.


Leave a Reply