பண்டிகைக்கால குற்றச் செயல்களை தடுக்க பொலிஸ் நடமாடும் சேவை நிலையம்

வவுனியா நகர்ப்புறங்களின் பாதுகாப்பிற்காகவும் பண்டிகைக்காலங்களில் இடம்பெறும் குற்றச் செயல்களைத்தடுத்து நிறுத்துவதற்கு வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்துடன் இணைந்து வவுனியா வர்த்தகர் சங்கம் பொலிஸ் நடமாடும் சேவை நிலையம் ஒன்றிணை இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டு அவசர தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி வெலிகள தலைமையில் இன்று பொலிஸ் நிலையத்தில் இச்சேவை நடமாடும் சேவை நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. விஷேடமாக பண்டிகைக்காலத்தில் வவுனியா நகர்ப்பகுதியில் இடம்பெறும் குற்றச் செயல்களை கண்காணிக்கவும் தடுத்து நிறுத்துவதற்கு 024 2222226, 071 8591343, 071 5412342 ஆகிய இலக்கங்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி சஞ்சீவ், வவுனியா வர்த்தகர் சங்கத்தலைவர் எஸ். சுஜன், செயலாளர் ஆ.அம்பிகைபாகன் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *