
அபிவிருத்தி லொத்தர் வரலாற்றில் மிகப் பெரிய பரிசு தொகையான 14 கோடி ரூபா பணப்பரிசை இரத்தினபுரி, மலங்கம பிரதேசத்தை சேர்ந்த குமார பிரியந்த என்ற அதிஷ்டசாலி வென்றுள்ளார்.
இந்த பணப்பரிசுக்கான காசோலையை பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று முன்தினம், பரிசை வென்ற குமார பிரியந்தவிடம் கையளித்துள்ளார்.
இந்த பணப்பரிசு பெற்ற லொத்தரை கொடக்கவெல விற்பனை பிரதிநிதி ஆர்.பி.சோமா பிரியந்தி என்பவர் விற்பனை செய்துள்ளார்.
இதேவேளை அபிவிருத்தி லொத்தர் சபையின் பழைய லொத்தர் சீட்டான சனிக்கிழமை அதிஷ்ட லொத்தரின் 3,667ஆவது சீட்டிலுப்பில் 7 கோடியே 17 லட்சம் ரூபா பணப் பரிசை வென்ற ஹொரணை பிரதேசத்தை சேர்ந்த டி.கே.குமாரவும் அன்றைய தினம் பிரதமரிடம் இருந்து பணப்பரிசுக்கான காசோலையை பெற்றுக்கொண்டார்.
Leave a Reply