
பொதுத் தேர்தலை இலக்கு வைத்து அரசாங்கம் எதிர்க்கட்சிகளை அடக்க முற்படுகின்றது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
எந்தவித நியாயமும் அற்று நிலையில் முடிவடைந்த வழக்கு ஒன்றை மீள விசாரிக்க ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் அநீதியான செயற்பாடுகளை கண்டிப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
எனவே அதற்கு எதிராக நீதியானதும், மனித உரிமைகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்புடனும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ஐக்கிய தேசிய முன்னணி என்ற வகையில் தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் சம்பிக்கவின் கைது குறித்து கருத்து வெளியிடும் போதே ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply