
கிளிநொச்சி- 155ம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தனியார் நிறுவனம் ஒன்றின் காவல் தொழிலாளியாக பணி புரியும் இவர் காலை பணிக்காக சென்றுள்ளார்.
துவிச்சக்கர வண்டியில் பயணித்த இம்முதியவர் மீது தென்னிலங்கையிலிருந்து யாழ் நோக்கி பயணித்த வான் மோதியுள்ளது.
விபத்தில் சின்னையா சுப்ரமணியம் எனும் 73 வயதானமலையாளபுரம் பகுதியை சேர்ந்த 8 பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
விபத்து இடம்பெற்றமை தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுக்கின்றனர்.




Leave a Reply