
சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டமை சட்ட விரோதமான செயற்பாடு என ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டமை சட்ட விரோதமான செயற்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் சம்பிக்க ரணவக்கவை கைது செய்யும் போது பின்பற்றப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் கைது செய்யப்படுவதற்கு காரணமான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவரை மீண்டும் கைது செய்தமையானது அரசியல் பழிவாங்கல் செயற்பாடு எனவும் அகிலவிராஜ் காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.
Leave a Reply