
வாரியபொல சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதி ஒருவரினாலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த சிறைக் கைதி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
போதைப்பொருள் கடத்தல் வியாபாரத்துடன் தொடர்புடையதாக இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இதுகுறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Leave a Reply