
நடிகர் விஜய் தற்போது கர்நாடகாவில் தனது தளபதி 64 படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார்.
இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் போன்ற பல நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர்.
மேலும், அண்மையில் கூட தளபதி 64ல் பிரபல காமெடி நடிகர் கலக்கப்போவது யாரு புகழ் ‘தீனா’ நடிப்பதாக தகவல்கள் கசிந்தது.
இந்நிலையில் தற்போது இளம் நடிகர் ரமேஷ் திலக் தளபதி 64ல் இணைந்துள்ளார், ரசிகர் எடுத்த வீடியோவையும் அவர் ஷேர் செய்துள்ளார்.
இவர் சூது கவ்வும், டிமான்ட்டி காலனி, ஆரஞ்சு மிட்டாய் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply