
சாமியார் நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ள முருகானந்தத்தை மீட்கக் கோரி அவரது தாய் தொடர்ந்த வழக்கில் நித்யானந்தாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா எங்கு உள்ளார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. பல்வேறு வழக்குகளில் தேடப்படும் நித்யானந்தா இந்தியாவை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.
நித்யானந்தாவை பிடிக்க கர்நாடக பொலிசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம் என்ற பல் மருத்துவர் கடந்த 2003ம் ஆண்டு, மனநல சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.
அங்கு அவருக்கு பிராணாசாமி என பெயர் சூட்டப்பட்டது. சமீபத்தில் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சீடர்கள் தாக்கப்பட்டனர். இதையடுத்து 15 வருடங்களாக ஆசிரமத்தில் இருந்த அவரை, கடந்த 5 மாதங்களாக அவரது உறவினர்கள் பார்க்க முடியவில்லை.
இதைத் தொடர்ந்து முருகானந்தத்தை சந்திக்கச் சென்ற தனக்கு பிடதி ஆசிரமத்தினர் அனுமதி வழங்கவில்லை எனவும், சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனை மீட்க கோரியும் அவரது தாய் அங்கம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது இது தொடர்பாக 4 வாரதிற்குள் பதிலளிக்க ஈரோடு காவல்துறையினர் மற்றும் நித்தியானந்தாவிற்கு உத்தரவிட்டனர்.
Leave a Reply