
பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்கு சென்றவரை காணவில்லை என வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கெருடாவில் தெற்கை சேர்ந்த பரமு விஜயகுமார் (வயது 38) என்பவரே காணாமல் போயுள்ளதாக நேற்று(வியாழக்கிழமை) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனது கணவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கடந்த 06ஆம் திகதி விசாரணைக்கு அழைத்திருந்தனர்.
அதற்காக அவர் கொழும்புக்கு சென்று இருந்தார். அன்றைய தினத்தில் இருந்து அவருடனான தொடர்பு கிடைக்கவில்லை என காணாமல் போனவரது மனைவி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
குறித்த முறைப்பாடு தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிசார் கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவினருடன் தொடர்பு கொண்டு வினவிய போது, குறித்த நபர் விசாரணைக்கு அன்றைய தினம் சமூகமளிக்க வில்லை என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Leave a Reply