
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மகாவலி ஆற்றின் நீர் மட்டம் மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் திருகோணமலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் வெலிக்கந்தை, கிண்ணியா, மூதூர், சேருவிலை மற்றும் கந்தளாய் போன்ற பிரதேச செயலகங்களில் வாழும் மக்களுக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொலன்னறுவை மாவட்டத்தின் லங்காபுர, தமன்கடுவை, மெதிரிகிரியை மற்றும் திம்புலாகலை போன்ற பிரதேச செயலகங்களில் வாழும் மக்களையும் அவதானமாக இருக்குமாறு விசேட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் மக்களை அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
Leave a Reply