
யாழ்.மாவட்டத்தில் ஒரு நாளில் 3 இடங்களில் இன்று அதிகாலை வாள்களுடன் முகங்களை மறைத்தவாறு வந்த கொள்ளை கும்பல் கொள்ளையில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸாா் கூறியுள்ளனா்.
சுன்னாகம் பொலிஸ் பிாிவிற்குட்பட்ட இரு இடங்களில் முகமூடி அணிந்தவாறு வந்த கொள்ளையா்கள் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டிருக்கின்றனா்.
இதேபோல் கோப்பாய் பொலிஸ் பிாிவிலும் ஒரு கொள்ளை சம்பவம் அதே பாணியில் இடம்பெற்றிருப்பதாக கோப்பாய் பொலிஸாா் கூறியிருக்கின்றனா்.
கோப்பாய் பகுதியில் வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் கதிர்வேல் செவ்வேளிடம் இந்த வழிப்பறிக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாக அவரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் கோப்பாயில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளிலில் வீதியில் பயணித்த அவரிடம் மூன்று பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்து இடைமறித்து பணம் மற்றும் அலைபேசியை பறித்தெடுத்துச் சென்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Leave a Reply