
விமானப்படை அதிகாரி ஒருவர் தனது குடும்பத்துடன் பயணித்த நிலையில் முகமூடியணித்த கொள்ளையர்கள் அவர்களை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
பலாலி இராணுவ முகாமில் விமானப் படை அதிகாரியாக பணியாற்றும் ஒருவர் தனது குடும்பத்தாருடன் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை முச்சக்கர வண்டியில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த போதே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஊரெழு பகுதியில் வைத்து இடைமறித்த முகமூடி அணிந்த மர்ம கும்பல் அவர்களிடமிருந்து நகை பணம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Leave a Reply