
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக தொகைக்கு அரிசியை விற்பனை செய்த 89 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை
சம்பா மற்றும் நாட்டரிசி வகைகளில் ஆகக்கூடிய விலையாக 98 ரூபாயை நிர்ணயித்து அரசாங்கம் நேற்று வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது.
இந்நிலையில் அதிக விலைகளில் விற்பனையாளர்கள் குறித்த அரசி வகைகளை விற்பனை செய்வதை தடுக்கும் வகையிலும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் வகையிலும் பொலிஸாருடன் இணைந்து நுவர்வோர் பாதுகாப்பு அதிகார சபை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
நேற்றும் இன்றும் 1,430 வர்த்தக நிலையங்களில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன. இதன்போது அதிக விலைகளில் அரசியை விற்பனை செய்யும் 512 வர்த்தக நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றுள் 89 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
Leave a Reply