அம்மா இல்லாத நேரத்தில் பாடசாலை மாணவியின் விபரீத செயல்

கிளிநொச்சியில் பாடசாலை மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி – யூனியன்குளம், மாணிக்கப் பிள்ளையார் கோயில் வீதியில் வசிக்கும் புவனேஸ்வரன் கார்விழி (கயல்) எனும் (15-வயது) மாணவி ஒருவரே நேற்று முன்தினம்(19) மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கோணாவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவியே இவ்வாறு தற்காெலை செய்து காெண்டுள்ளார்.

அம்மம்மா வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்றுவரும் மாணவி நேற்றைய தினம் ஸ்கந்தபுரம் சென்று மாலை மூண்று மணியளவில் திரும்பி வந்துள்ளார்.

இந்நிலையில் மாணவியின் அம்மம்மா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரை பார்க்க சென்றிருந்த சமயத்திலே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

“எனக்கு வாழ பிடிக்கவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன்” என கடிதம் எழுதி வைத்துவிட்டே தூக்கிட்டு இறந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை அக்கராயன் குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *