
தோட்டவெளிப் பங்குத்தந்தை, பொலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக மன்னார் மடு மாதா சிறிய குருமட பழைய மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மன்னார் மடுமாதா சிறிய குருமட பழைய மாணவர் அமைப்பின் உப செயலாளர் பொனிப்பாஸ் ஆன்சலோ பீரிஸ் கண்டன அறிக்கையொன்றை இன்று (சனிக்கிழமை) விடுத்துள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர் தெரிவிக்கையில் “மன்னாரில் உள்ள சகல மதத்தவர்களும் ஒற்றுமையாக வாழவே விரும்புகின்றனர். மதங்கள் ஒற்றுமையாக இருப்பதற்கு பொலிஸ் அதிகாரிகள் உதவவேண்டுமே தவிர இடையூறாக இருக்கக்கூடாது.
தோட்டவெளிப் பங்குத்தந்தை, பொலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்டமையை எமது அமைப்பானது வன்மையாகக் கண்டிக்கின்றது.
உயர் அதிகாரிகள் இவர்மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்க வேண்டுமெனவும் கோரி நிற்கிறது. எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாமல் இருப்பதை சம்மந்தப்பட்டவர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் எமது அமைப்பு வேண்டி நிற்கின்றது” என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply