
வட அமெரிக்கா நாடான மெக்ஸிக்கோவில் இரண்டு பெரிய சொகுசு கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்ஸிகன் துறைமுகமான கோசுமேலில் கார்னிவல் குளோரி-கார்னிவல் லெஜண்ட் ஆகிய இரண்டு சொகுசு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் ஒரு கப்பலின் பின்புறம் பலத்த சேதமடைந்துள்ளது.
விபத்தில் 6 பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. மற்ற சுற்றுலா பயணிகள் அனைவரும் கப்பலிலிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து சொகுசு கப்பல் நிறுவனம் அளித்த தகவலில், கார்னிவல் குளோரி கப்பல் துறைமுகத்தில் நிறுத்த முயன்ற போது கார்னிவல் லெஜண்டுடன் மோதி விபத்துக்குள்ளானது.
நாங்கள் சேதத்தை மதிப்பிடுகிறோம், ஆனால் கப்பலுக்கும் கடலுக்கும் எந்தவொரு பாதிக்கும் பிரச்னைகள் எதுவும் இல்லை.
இரு கப்பல்களிலிருந்த பயணிகளை கொசுமேலில் தங்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.
எங்கள் ஆரம்ப மதிப்பீட்டிலிருந்து, சிறிய காயங்களுடன் ஆறு பயணிகள் கார்னிவல் குளோரி மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
வீடியோவில், கப்பல்களின் இரண்டு பின்புற முனைகளும் ஒன்றுக்கென்று மோதிக்கொள்வதை காட்டுகிறது.
உள்ளுர் நேரப்படி காலை 8.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததை கொசுமேலில் உள்ள உள்ளுர் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியதோடு, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply