
இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி, காப்பகத்தில் வளரும் குழந்தைகளுக்காக கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் சென்றுள்ளார்.
கொல்கத்தாவில் காப்பகத்தில் வளரும் சில குழந்தைகள், தங்களுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுகளை கொடுத்தால் நன்றாக இருக்கும் என ஆசைப்பட்டுள்ளனர்.
மேலும் தங்களுக்கு என்ன மாதிரியான பரிசு வேண்டும் எனக்கூறியதோடு, பிடித்த வீரர்களாக சச்சின் டெண்டுல்கர், பி.வி.சிந்து, கிறிஸ்டியானோ ரொனால்டோ, எம்.எஸ்.தோனி மற்றும் விராட் ஆகியோரின் பெயர்களை கூறியுள்ளனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து, காப்பகத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கியதோடு, இறுதியாக ஒப்பனையை கழற்றி முகத்தை காண்பிக்கிறார். அதனை பார்த்து மகிழ்ச்சியடைந்த சிறார்கள் வேகமாக ஓடிசென்று கட்டிப்பிடிக்கின்றனர்.
நெகிழ்ச்சியான இந்த வீடியோ காட்சியினை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
Leave a Reply