
ஜனாதிபதி தேர்தலில் என்னை எதிர்த்துப் போட்டியிட்டவர் மிகவும் அதிஷ்டசாலியானவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,
ஜனாதிபதி தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட்டவர் அதிஷ்டசாலியானவர். அவரை யாரும் காலை பிடித்து இழுக்கவில்லை. ஆனால் எனது கால்களை எல்லா இடங்களிலும் பின்னால் இழுத்தனர்.
சிலர் எதிராளியுடன் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சிலர் கொம்புகளை அணிவிக்க முற்பட்டனர். இந்நிலையில், பொதுமக்களின் ஆசிர்வாதத்திலேயே தனது பயணத்தின் எதிர்காலம் அமைந்துள்ளது.
இதன் காரணமாக சிறந்த கூட்டணி ஒன்றை உருவாக்கி எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளேன். பதவிகளுக்காக பிளவுப்பட மற்றும் முறுகல் ஏற்படுத்திக்கொள்ள தான் தயாரில்லை.
மக்களின் ஆசிர்வாதத்துடனே அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும். எவ்வாறாயினும், பதவிகளை பெற்றுக்கொடுக்கப்பதற்காக தாம் நாடு பூராகவும் பயணிக்க தயாரில்லை” என அவர் மேலும் கூறியுள்ளார்.
Leave a Reply