
தாய்லாந்திற்கு சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் 4000 கோழிகளை அதிகாரிகள் கைப்பற்றி கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.
மலேசியாவிலிருந்து தாய்லாந்திற்கு கடத்தப்பட்ட 4000 கோழிகளை, கடந்த நவம்பர் 20ம் திகதியன்று சுங்கத்துறையினர் தடுத்து கைப்பற்றியுள்ளனர்.
அதன்பிறகு அந்த கோழிகளை, ஹட் யாய் மாவட்டத்தில் உள்ள சாங்ஹ்லா விலங்கு தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து உயிருடன் சேற்று நீரில் வீசியெறிந்து கொன்றதாக கூறப்படுகிறது.
கோழிகள் உயிருக்கு போராடுவதை பார்த்து கோபமடைந்த உள்ளூர்வாசிகள் சிலர், அதனை வீடியோவாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கால்நடை மேம்பாட்டுத் துறையின் இயக்குநர் சொராவிட் ரனீடோ விளக்கம் கொடுத்துள்ளார்.
கோழிகளுக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டதும், அவற்றை விரைவில் அகற்ற வேண்டியிருந்தது.

அதனை கருணைக்கொலை செய்வதே சரியான வழி என்பதை முடிவு செய்தோம். முதலில் அவற்றின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தான் சேற்றில் வீசினோம். அப்படி இருந்தும், உயிர்பிழைத்த ஒரு சில கோழிகள் மட்டுமே சேற்றில் துடித்துள்ளன என தெரிவித்துள்ளார்.
Leave a Reply