
டெங்கு நோய் அதிகரித்துக் காணப்படும் ஐந்து இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சுகாதார பிரிவினரால் இந்த பகுதிகள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
வத்தளை, நீர்கொழும்பு, கொதட்டுவ, கோப்பாய், கொலன்னாவ ஆகிய இடங்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
குறித்த நகர சபை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் பரவும் ஆபத்து அதிகரித்துக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 90,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply