
அதிவேகத்தில் சென்ற ஆம்புலன்சில் இருந்து நோயாளி கீழே விழுந்தது கூட தெரியாமல், அலட்சியமாக இருந்த துணை மருத்துவருக்கு எதிராக பொலிஸார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
8 மாதங்களுக்கு முன்பு ரஷ்யாவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 56 வயதான கலினா டிமிட்ரியேவா, என்கிற பெண், ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் மாற்றப்பட்டுள்ளார்.
அப்போது ஆம்புலன்சில் இருந்த துணை மருத்துவர் விதியை மீறி, நோயாளியுடன் இருக்காமல், ஓட்டுநர் இருக்கையின் அருகே அமர்ந்திருந்துள்ளார்.
தன்னுடைய உடல்நிலை மோசமடைந்து வருவதாக, கலினா கெஞ்சியுள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாத அந்த செவிலியர், வாயை மூடிக்கொண்டு இருக்கையில் அமருமாறு அதட்டியுள்ளார்.
இதற்கிடையில் பின்பக்க கதவு சரியாக பூட்டாமல் இருந்ததால், உள்ளிருந்த கலினா சாலையில் தூக்கிவீசப்பட்டுள்ளார்.
ஆனால் இதனை கவனிக்காமல் அலட்சியமாக இருந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 25 கிமீ தூரம் தாண்டி சென்றுவிட்டனர்.

இதற்கிடையில் சாலையில் விழுந்த கலினா அங்கிருந்த மற்ற கார் ஓட்டுனர்கள் மட்டும் போக்குவரத்து பொலிஸாரால் மீட்கப்பட்டு, மற்றொரு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தினால் அந்த பெண்ணின் தாடை, கால் மற்றும் இடுப்பு பகுதியில் எலும்புகள் உடைந்தன. இந்த சம்பவம் தொடர்பாக முதலில் பொலிஸார் வழக்கு பதிய மறுத்துள்ளனர். அதேபோல, நோயாளி வேண்டுமென்றே ஆம்புலன்சில் இருந்து குதித்ததாக மருத்துவ நிர்வாகமும் கூறி வந்தது.
தற்போது மருத்துவ நிர்வாகம் தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டதை அடுத்து, விசாரணை ஆரம்பமாகியுள்ளது. இதில் சம்மந்தப்பட்ட ஊழியர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவதோடு, துணை மருத்துவருக்கு குறைந்தபட்சம் ஒரு வருடம் சிறைத்தண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது.
Leave a Reply