
தமிழகத்தில் கார்த்திகை மகா தீபத்தை தரிசிக்க 2,668 அடி உயர மலை உச்சிக்கு சென்ற பக்தர்கள் வீசிச் சென்ற பிளாஸ்டிக் கழிவுகளை ஒரு வாரகாலமாக அகற்றும் பணியில் ஜேர்மானிய இளைஞர் ஒருவர் ஈடுபட்டு வருகிறார்.
குறித்த இளைஞர் இந்தியாவுக்கு ஆன்மிக சுற்றுலா வந்துள்ளதாக கூறப்படுகிறது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
அதன்படி இந்தாண்டு கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1 ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்றது.
2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டதை லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் மகா தீபத்தை தரிசிக்க மலை உச்சிக்கு சென்ற பக்தர்கள் வீசிச் சென்ற பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஜேர்மானிய ஆன்மிக சுற்றுலா பக்தர் ஒருவர் ஈடுபட்டு வருகிறார்.
இது அனைவரின் கவனத்தையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
Leave a Reply