பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் எழுவர் கைது!

பாகிஸ்தானுடன் தொடர்பு வைத்துக்கொண்டு உளவு பார்த்த குற்றச்சாட்டில் 7 கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திர பொலிஸ்  உளவுப்பிரிவு,  மத்திய உளவுப்பிரிவு மற்றும் கடற்படை உளவுப்பிரிவு அதிகாரிகள் ஆந்திர மாநிலத்தில் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

இதன்போதே குறித்த ஏழு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன்,  அவர்களுடன் ஹவாலா பணப்பரிவர்த்தனையில் ஈடுபடும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் நாட்டின் பல பகுதிகளில் கைதானதாக தெரிகிறது.

இதுதொடர்பாக ஆந்திர பொலிஸார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சந்தேகிக்கப்படும் மேலும் சிலரிடம் பொலிஸார்  விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *