
பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமுல் செய்யப்படாது என முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
பாட்னாவில் நேற்று ( வெள்ளிக்கிழமை) ‘தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் குறித்து ‘ செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அசாம் மாநிலத்தில் 1951-க்கு பிறகு சமீபத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) தயாரித்து வெளியிடப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த பட்டியலில் 19 இலட்சம் பெயர்கள் விடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இதற்கு பரவலாக எதிர்ப்பு ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply