
பௌத்த மதகுரு ஒருவர் மூன்று பேர் கொண்ட குழுவினால் தாக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இரவு இந்த சம்பவம் தொடர்பாக சிங்கள இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு எல்லையிலுள்ள ஓமாடியாமடு கிராமத்தில் உள்ள சுதுகல ஆரன்ய சேனாச்சனிய விகாரையின் பௌத்த மதகுருவான சுபத்தாலங்காரம கிமி என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த மூன்று இளைஞர்கள் நேற்று இரவு மது அருந்திவிட்டு விகாரைக்குள் பிரவேசித்துள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்தியமையாலேயே குறித்த மதகுரு மீது பொல்லால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த மதகுரு நடமாட முடியாத நிலையில், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மதகுரவை மீட்டு, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Leave a Reply