
யாழ்ப்பாணம் – மல்லாகம் நீதவான் முகாமில் உள்ள மக்களில் நிலைமைகள் தொடர்பாக சமுதாய வலுவூட்டல்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.
கடந்த 30 வருடங்களாக மயிலிட்டி பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் 53 குடும்பங்களுக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களையே அமைச்சர் இன்று (சனிக்கிழமை) சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது தாங்கள் பிறந்து வாழ்ந்த தமது சொந்த நிலத்தில் தாம் மீண்டும் வாழவேண்டும் என மக்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்த சந்திப்பில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடன், யாழ். மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.சிவசிறி உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.
Leave a Reply