
யாழ்.மத்திய சிறைச்சாலைக்கு முன்பாக இலங்கைக்கு விஜயன் வந்தமையைக் குறிக்கும் வகையில் பெளத்த சிலை அமைக்கப்பட்டு இன்று காலை திறந்துவைக்கப்படவுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த சிலையினை கைதி ஒருவர் 5 அடிஉயரத்தி ல் அமைத்துள்ளதாகவும் இந்த சிலை நேற்று இரவு வெளியில் எடுத்துவரப்பட்டு இன்று காலை வருகை தரும் சிறைச்சாலைகள் ஆணையாளரினால் அது திறந்துவைக்கப்படவிருக்கிறது.
இராணுவ முகாம்களிலும், வைக்கப்பட்ட விகாரைகளும் புத்தர் சிலைகளும், பெளத்த மத சின்னங்களும் இப்போது சிறைச்சாலைகளிலும் வைக்கப்படுகிறது.
இதனை எதிர்த்து நாளை ஒன்று கூட பொதுமக்களை யாழ்.மாநகரசபை உறுப்பினர்கள் அழைத்துள்ளனர்.
இவ் இரகசிய சிலை அமைக்கும் திட்டம் நடைபெறுவது குறித்து நம்பத் தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி க.சுகாஸும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply