
டெல்லியில் கடும் பனிப்பொழிவு காரணமாக டெல்லிக்கு வரும் மற்றும் டெல்லியில் இருந்து செல்லும் விமானங்கள் மாற்று பாதையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் சில விமானங்கள் தாமதமாகச் சென்றுள்ளன.
மார்கழி பனி வட. இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக காஷ்மீர், பஞ்சாப், டெல்லி, உ.பி., உத்தரகண்டம், ஹிமாச்சல் மாநிலங்களில் மக்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக டெல்லிக்கு வரும் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் காலதாமதமாக வருவதோ, விமானங்கள் தரை இறங்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நேற்று நள்ளிரவு முதல் 46 விமானங்கள் மாற்று பாதையில் செல்லவும் வேறு விமான நிலையங்களில் இறங்கவும் விமான கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Leave a Reply