
ண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு திட்டத்தின் கீழ் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், முப்படையினரும், பொலிஸாரும் விசேட நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘கிறிஸ்மஸ் பண்டிகை காலங்களில், முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில், குறிப்பாக கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளை உள்ளடக்கி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பண்டிகை காலங்களில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அடுத்து, முப்படையினர் மற்றும் பொலிஸாரிடமிருந்து கூடுதல் பாதுகாப்புப் பணியாளர்கள் கடந்த இரண்டு வாரங்களாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, வழிபாட்டுத் தலங்கள், பொது இடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களுக்கு பாதுகாப்பு வழங்க முப்படையினரும், பொலிஸாரும் அந்தந்த பகுதிகளில் உள்ள விழிப்புணர்வு குழுக்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்’ தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேவாலயங்களின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு கொழும்பு பேராயர் அரசாங்கத்திடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply