3ம் உலகப் போர்: ஒரே ஒரு தாக்குதலில்… ஒட்டுமொத்த பிரித்தானியாவையும் ரஷ்யா அழித்துவிடும்

3ம் உலகப் போர் ஏற்பட்டால் பிரித்தானியாவை ஒரே தாக்குதலில் அழிக்கும் அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யா உருவாக்கி வருகிறது என பாதுகாப்பு நிபுணர் எச்சரித்துள்ளார்.

பாதுகாப்பு நிபுணர் இயன் பாலான்டின் கூறியதாவது, 2010ன் பேரழிவு கூட்டணி பாதுகாப்பு மறுஆய்வுக்குப் பின்னர் பிரித்தானியாவின் பாதுகாப்புகளில் ஒரு துளை உள்ளது. அதில் ராயல் விமானப்படையின் முழு நிம்ரோட் நீண்ட தூர கடல் ரோந்து விமானப் படையை அகற்றுவது உள்ளிட்ட முக்கிய இராணுவ திறன்களை நிராகரித்தது.

கடல் பகுதியை பாதுகாப்பதில் பத்து வருட இடைவெளிவிட்டுள்ளது பொறுப்பற்ற செயல். நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட கடற்படையின் நிலைகள் அடுத்தடுத்த அரசாங்கங்களின் கீழ் ஆபத்தான அளவிற்கு குறைந்துவிட்டன.

பிரித்தானியாவிற்கு பி8ஏ போஸிடான், போர் கப்பல்கள் மற்றும் டெல்ட்ராயர் போன்ற விமானங்களும், ஹெலிகாப்டர்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களும் தேவை.

அவற்றை கையகப்படுத்தல், தற்போது ரஷ்யா உட்பட சர்வதேச நாடுகளுடன் நிலவும் பதட்டங்களுக்கு மத்தியல் தெளிவான செயல்படாகும்.

பிரித்தானியாவில் அரசியல் மற்றும் இராணுவத் தலைமையில் உள்ள சிலர் ரஷ்யாவில் அச்சுறுத்தலின் அளவை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். யாரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, ஆனால் அவை மிகவும் தவறானவை.

ரஷ்யா கடலுக்கடியில் உள்ள சில திறன்களில் முதலீடு செய்கிறது. எடுத்துக்காட்டாக, கடற்பரப்பு தகவல்தொடர்பு கேபிள்களைப் சேதப்படுவதின் மூலம் உலகத்துடன் பிரித்தானியாவுக்கு உள்ள இணைய இணைப்புகளில் தலையிடலாம் அல்லது துண்டிக்கலாம்.

ரஷ்யர்கள் புதிய அணுசக்தி ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்களையும் உருவாக்கி வருகின்றனர், இது ஒரே தாக்குதலில் பிரித்தானியாவை அழிக்கக்கூடும் என பாதுகாப்பு நிபுணர் இயன் பாலான்டின் எச்சரித்துள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *