
கே.ஜி.எஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.
அதில், கதாநாயகன் ‘ராக்கி’, கேஜிஎஃப்-ல் பணிபுரியும் ஆட்களுடன் சேர்ந்து சாய்ந்து கிடந்த இரும்புக் குழாய் ஒன்றை கயிறு கட்டி தூக்கி நிறுத்துகிறார்.
அந்த புகைப்படத்தை பார்க்கும்போது, ஒரு தலைவன் மக்களை வேலை வாங்காமல் அவர்களுடன் இணைந்து களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் இருக்கிறது.
அத்துடன் சாம்ராஜ்ஜியத்தின் மறுகட்டமைப்போம் எனவும் போஸ்டரின் மேல், எழுதப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி போஸ்டரில் ‘ராக்கி’ இருக்கும் நிலை திரைப்படத்தின் முதல் பாகத்தில் ஒரு காட்சியில் காட்டப்பட்டது தான்.
அவர் பொலிஸ் நிலையத்தில் லைசென்ஸ் இல்லாமல் சிக்குவதும், பின்னர் மூன்று ஹெலிகாப்டரில் அவரது ஆட்கள் வந்து லைசென்ஸ் கொடுப்பதும் என மிரட்டலாக இருக்கும் அந்த காட்சி. அப்போது சிறைக்குள் இருக்கும் கைதிகள் ‘அடிமை இல்ல தலைவன்’ என குரல் எழுப்புவார்கள்”
Leave a Reply