
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காப்பகம் ஒன்றில் தாயாருடன் தங்கியிருக்கும் சிறுவன் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு எழுதியுள்ள கடிதமே பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
குடும்ப தகராறு காரணமாகவே 7 வயது சிறுவனையும் அவரது தாயாரையும் காப்பகம் ஒன்றில் கடந்த 2 மாதம் முன்பு சேர்ப்பித்துள்ளனர்.
கொடூரமான துன்புறுத்தலை நேரிடையாக பார்த்த அந்த சிறுவனின் மன நிலை குறித்த கடிதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கடிதத்தில் அந்த சிறுவன், எங்களுக்கு எங்கள் குடியிருப்பை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குடியிருப்பில் அனைத்து பணிகளையும் தாயாரே பார்த்துக் கொள்கிறார்.
அப்பா அனைவருடனும் எப்போதும் கோபம் காட்டுவார். எதை செய்தாலும் அப்பா எங்களை துன்புறுத்துவார்.
இந்த குடியிருப்பில் இருந்து வெளியேற நாள் ஆனது என தாயாரே எங்களிடம் முதன் முறையாக தெரிவித்தார்

அச்சுறுத்தல் இல்லாத ஒரு இடத்திற்கு எங்களை அழைத்து செல்ல இருப்பதாகவும் தாயார் அன்று தெரிவித்த்கார்.
தற்போது வசிக்கும் காப்பகத்தில் எந்த அச்சுறுத்தலும் இல்லை என குறிப்பிட்டுள்ள சிறுவன், தனக்கு இப்போதும் பயமாக இருக்கிறது எனவும், இங்குள்ளவர்களிடம் மனம் விட்டு பேச முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளான்.
காப்பகத்தில் உள்ள அனைவரும் கிறிஸ்துமஸ் கொண்டாட சென்றுள்ளனர். நாங்கள் மட்டுமே இங்கு தனித்து விடப்பட்டுள்ளோம்.
என்னைப் பார்க்க இந்த முறை கிறிஸ்த்துமஸ் தாத்தா கண்டிப்பாக வர வேண்டும். வரும்போது பரிசுகளுடன் அன்பான ஒரு தந்தையையும் எனக்கு கொண்டு தர முடியுமா என அந்த சிறுவன் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளான்.
Leave a Reply