எனக்கு திருமணம் ஆகவில்லையே! பெண் கிடைக்காத ஏக்கத்தில் 29 வயது இளைஞர் எடுத்த முடிவு

தமிழகத்தில் திருமணம் நடக்காத ஏக்கத்தில் மனமுடைந்த வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிதம்பரம் அடுத்த காட்டுமன்னார்கோவில் தாலுகா வடமூரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பாலகிருஷ்ணன் (67).

இவரது மகன் ரவிச்சந்திரன் (29). இவருக்கு நீண்ட காலமாக திருமணத்திற்கு பெண் பார்த்தும் திருமணம் தடை பட்டது.

இதனால் தான் திருமணம் செய்து கொள்ள பெண் அமையவில்லையே என கடந்த சில மாதங்களாக மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 19ம் திகதி ரவிச்சந்திரன் வீட்டில் துாக்குப் போட்டுக்கொண்டார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி ரவிச்சந்திரன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சிதம்பரம் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *