
ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் அவுஸ்திரேலியா வீரர் பாட் கம்மின்ஸை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிக தொகை கொடுத்து ஏன் வாங்கியது என்பது குறித்து அந்தணியின் முன்னாள் தலைவரான கங்குலி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் கடந்த 19 மற்றும் 20-ஆம் திகதி 2020-ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் நடைபெற்றது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில், அவுஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸை, கொல்கத்தா அணி 15.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
ஐபிஎல் வரலாற்றில் வெளிநாட்டு வீரர் இது போன்ற பெரிய தொகைக்கு எடுக்கப்படுவது இதுவே முதல் முறை, இது குறித்து கொல்கத்தா அணியின் முன்னாள் தலைவரும், பிசிசிஐயின் தலைவருமான கங்குலி கூறுகையில், கம்மின்ஸுக்கு கொடுக்கப்பட்டது மிகவும் அதிகமான தொகை என்று நான் சொல்லமாட்டேன்.

ஏனெனில் அந்தளவிற்கு அவருக்கு கிராக்கி இருந்தது. குறைவான வீரர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ஏலத்தில், தேவைக்கேற்ப வீரர்கள் அதிகமாக இல்லாததால், சில வீரர்கள் மிக அதிகமான தொகைக்கு ஏலம் போவது இயல்புதான்.
இதேபோன்றதொரு சிறிய ஏலத்தில் தான் பென் ஸ்டோக்ஸுக்கும் 14 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார் என்று இதன்பின்னால் இருக்கும் ரகசியத்தை கூறினார்.
Leave a Reply