
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளது.
எதிர்வரும் 31ஆம் திகதியுடன் பதவிக்காலம் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய செயற்குழு எதிர்வரும் ஜனவரி மாதம் நியமிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
செயற்குழுவுக்கான நியமனங்களை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 92. அதில் 20 உறுப்பினர்களை கட்சியின் தலைவரே நேரடியாக நியமிப்பார்.
இதனையடுத்து கட்சியின் ஏனைய பதவிகளுக்கு வேறு நபர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
பிரதேச அரசியல்வாதிகள், மாகாண சபை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களும் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
Leave a Reply