
யாழில் இன்று காலை முதல் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயல்களை கட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்டன.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் ஒன்றிணைந்து முன்னெடுத்தனர்.



Leave a Reply