
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டி – யாழ்ப்பாணத்திற்கான ஏ9 வீதியின் நாவுல பிரதேசம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
தற்போது நிலவும் அடைமழை காரணமாக வாகன போக்குவரத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை 5 மணியவில் குறித்த பகுதியில் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், நாவுல – பொபெல்ல சந்தியில் இருந்து நாவுல நகரத்திலும், தம்புளை நோக்கி செல்லும் வீதியிலும் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Leave a Reply