
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை தொடக்கம் நீர்கொழும்பு வரையிலும் காலி தொடக்கம் நீர்கொழும்பு வரையிலும் சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் கட்டணம் குறைக்கப்படவுள்ளது.
பயணிகள் போக்குவரத்து, மின்சக்தி, சக்திவலு அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஆலோசனைக்கு அமைய நாளை (திங்கட்கிழமை) தொடக்கம் இந்த திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கு அமைவாக நீர்கொழும்பு தொடக்கம் மாத்தறை வரையில் அறவிடப்பட்ட 720 ரூபாய் அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணம் 700 ரூபாயாக குறைக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு தொடக்கம் காலி வரையிலான அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணம் 630 ரூபாயில் இருந்து 600 ரூபாயாக குறைக்கப்படுகிறதென்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Leave a Reply