
வவுனியா கண்டிவீதி ஜோசப் இராணுவ முகாமிற்கு அண்மையில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
தென்பகுதியில் இருந்து யாழ்.நோக்கி பயணித்த சிறியரக காரினை, அதே திசையில் பயணித்த தனியார் பேருந்து பின்புறமாக மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தினால் அருகிலுள்ள பள்ளத்தினுள் குறித்த கார் இழுத்துசெல்லப்பட்ட நிலையில் அதிஸ்டவசமாக உயிர்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விபத்திற்குள்ளான காரில் யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி உட்பட அவரது குடும்பத்தினர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


Leave a Reply