
வவுனியா நெளுக்குளத்தில் குடியிருப்பிற்குள் நுழைந்த ஆறு அடி நீளமான முதலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இதுபற்றி தெரியவருவதாவது, அதிகாலை ஒரு மணியளவில் வவுனியா நெளுக்குளம் பகுதியில் அமைந்துள்ள வீட்டினுள் முதலை ஒன்று நுழைவதை அவ்வீட்டார் அவதானித்துள்ளனர். இதனை அடுத்து அயலவர்களின் துணையுடன் குறித்த முதலையினை பிடித்ததுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக வன ஜீவராசி திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டு முதலையினை மீட்கும் நடவடிக்கையில் வனஜீவராசி திணைக்களம் ஈடுபட்டுள்ளது.
அண்மைக்காலமாக நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக முதலைகள் குடியிருப்பு பகுதிகளிற்குள் வருகின்ற செயற்பாடுகள் இடம்பெறுகிறது.

Leave a Reply