
ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
சிறிய கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொள்ள விரும்புவதாக அறிவித்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தால் சுதந்திரக் கட்சியை பாதுகாத்துக் கொள்ள முடியும் என சிலர் கூறுகின்றனர்.
எனினும், கோட்டாபய ராஜபக்ச தவிர்ந்த ஏனைய எவருடனும் பேச்சுவார்த்தை நடாத்துவதில்லை என்பதே எனது நிலைப்பாடாகும். கட்சியை பாதுகாத்து நாட்டை பாதுகாக்க முடியாவிட்டால் அதில் பயனில்லை.
நாட்டு மக்கள் நூற்றுக்கு நூறு வீதம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். கட்சியின் பாதுகாப்பு தொடர்பிலும் இவ்வாறான நம்பிக்கையுடன் நாம் செயற்பட்டு வருகின்றோம்.
கிராமிய பகுதிகளில் சில பிரச்சினைகள் காணப்பட்டாலும் தாம் உள்ளிட்ட தரப்பினர் வேறும் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு தயாரில்லை என தெரிவித்துள்ளார்.
Leave a Reply