கதிர்காமம் கோயில் நீரில் மூழ்கியது

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் பெருமளவிலான அனர்த்தங்கள் பல பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

குறிப்பாக வெள்ளப் பெருக்கு, மண்சரிவு, மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கின்றார்.

இந்நிலையில் புனித பூமியான செல்ல கதிர்காமம் கோயில் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. மாணிக்கக் கங்கையின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ள நிலையிலேயே ஆலயம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது.

செல்ல கதிர்காமம் கோயிலின் நாளாந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கதிர்காமம் முருகன் கோயிலின் நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *