
பிரியங்கா வழக்கில் சுட்டு கொல்லப்பட்ட நான்கு பேரின் உடல்களுக்கும் இரண்டாம் முறையாக பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு பின்னர் குடும்பத்தாரிடம் சடலங்கள் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டியை பலாத்காரம் செய்து கொன்ற முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்னகேசவலு ஆகிய நால்வரும் கடந்த 6ஆம் திகதி பொலிசார் என் கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டனர்.
இதன்பின்னர் நால்வரது சடலமும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.ஆனால் நீதிமன்ற உத்தரவின்படி பிரேத பரிசோதனைக்கு பின்னர் மருத்துவமனையிலேயே சடலங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சடலங்களை பொலிசாரே புதைத்துவிடுவார்கள் எனவும், குடும்பத்தாரிடம் ஒப்படைக்க மாட்டார்கள் எனவும் ஒரு தகவல் பரவியது.
ஆனால் தயவு செய்து சடலங்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு குற்றவாளிகளின் குடும்பத்தார் கேட்டு கொண்டனர்.
மேலும் சின்னகேசவலுவின் கர்ப்பிணி மனைவி ரேணுகா கணவர் சடலத்தை தன்னிடம் ஒப்படைக்க கோரி சாலையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்.
இந்நிலையில் நான்கு சடலங்களுக்கும் இரண்டாம் முறையாக பிரேத பரிசோதனை செய்ய சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த பிரேத பரிசோதனையானது திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இதை மேற்கொள்ள மருத்துவர்களின் பெயர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மருத்துவர் சுதிர் கே குப்தா, மருத்துவர் அதர்ஷ் குமார், மருத்துவர் அபிஷேக் யாதவ் ஆகிய மூவரும் தான் பிரேத பரிசோதனை செய்யவுள்ளனர்.
மேலும் பிரேத பரிசோதனை செய்யப்படும் காட்சிகள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் திடீரென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக பிரேத பரிசோதனைக்கு பின்னர் நான்கு பேரின் உடல்களும் அவர்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என தற்போது தெரியவந்துள்ளது.
Leave a Reply