
2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டில் நாளை (செவ்வாய்க்கிழமை) கையொப்பம் இடவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இந்தமுறை தயாரிக்கப்பட்டுள்ள வாக்காளர் பதிவேடு தொடர்பான ஆட்சேபனைகளை தெரிவிக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக அச்செயலகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் நாட்களில் 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேடு பகிரங்கப்படுத்தப்படவுள்ளது.
எனினும் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு அவர்களின் பெயர்களை வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்ய ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். எனவே, அந்த நடவடிக்கையும் நிறைவடைந்த பின்னர் வாக்காளர் பதிவேடு பகிரங்கப்படுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தல் குறிப்பிட்ட திகதியில் நடத்தப்பட்டால் இந்த வாக்காளர் பதிவேட்டை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் கடந்த வருடம் பயன்படுத்திய வாக்காளர் பதிவேட்டை இந்த முறையும் பயன்படுத்த நேரிடும் என தேர்தல் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.
Leave a Reply