
அஜித் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர். இவர் வினோத் இயக்கத்தில் தனது 60வது படத்தில் நடித்து வருகிறார்.
இதில் போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்கிறார் என இப்பட தயாரிப்பாளர் போனி கபூரே ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
அஜித்தை பற்றி அண்மையில் தனது பேட்டியில் கூறியுள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். அதில் அவர், அஜித் அவர்களுடன் வேலை பார்த்ததுக்கு அப்புறம் லைஃப் ஸ்டைல் மாறிவிட்டது.
அவர் நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் என்னிடம் சொன்னதை எல்லாம் வாழ்க்கையில் நடைமுறைக்கு கொண்டு வந்தேன்.
நிறைய வேலைகளை முழு ஈடுபாட்டோடு செய்து கொண்டிருக்கிறேன், மிகவும் ஒழுக்கமா இருக்கிறேன்.
இது எல்லாவற்றிற்கும் காரணம் அஜித் அவர்கள் தான் என பேசியுள்ளார்.
Leave a Reply