
அதிகூடிய விலையில் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் தொடர்பாக தொடர்ந்தும் தகவல்கள் கிடைக்கப் பெற்று வருவதாக நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.
அவ்வாறான வர்த்தக நிலையங்களை சுற்றி வளைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
அந்தவகையில் நேற்று (திங்கட்கிழமை) இரத்தினபுரி மற்றும் எஹலியகொட பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது, 15 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.
சம்பா மற்றும் நாட்டரிசி கிலோ ஒன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை 98 ரூபாய் என அரசாங்கம் அண்மையில் விலை நிர்ணயித்திருந்தது.
எனினும் அதிகூடிய விலையில் அரிசி விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடுகள் தொடர்ந்தும் கிடைக்க பெற்று வருவதாக நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.
Leave a Reply