
இலங்கை அணிக்கு எதிரான டி-20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யார்க்கர் கிங் பும்ரா அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
வரும் ஜனவரி 2020இல் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டி-20 போட்டி வரும் ஜனவரி 5ஆம் திகதி கவுஹாத்தியில் துவங்குகிறது.
பின்னர் ஜனவரி 7ஆம் திகதி ராஜ்கோட்டில் இரண்டாவது போட்டியும், 10ஆம் திகதி புனேவில் மூன்றாவது போட்டியும் நடைபெறவுள்ளது.
இதில் இந்திய துவக்க வீரர் ரோஹித் ஷர்மா ஓய்வு தேவை என கேட்டுக்கொண்டதால் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் காயத்தில் இருந்து மீண்டு வந்த ஷிகர் தவன், பும்ரா ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினர்.
இந்திய அணி விபரம்,
விராட் கோஹ்லி (அணித்தலைவர்), ஷிகர் தவன், கே.எல். ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், ரவிந்திர ஜடேஜா, சிவம் துபே, யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, நவ்தீப் சாய்னி, சார்துல் தாகூர், மணீஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன்.
Leave a Reply