
இணையத்தில், டேட்டிங் தளங்களில், பெண்களைக் குறிவைத்து வேண்டுமென்றே ஹெச்.ஐ.வியை பரப்பிய நபருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் Marylandஐச் சேர்ந்த Rudolph Jericho Smith (37) என்பவர், தனக்கு ஹெச்.ஐ.வி இருப்பது தெரிந்தும், அதை மறைத்து பெண்களுடன் பாதுகாப்பற்ற பாலுறவு கொண்டுள்ளது 21 மாத நீண்ட விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த Smithக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதில் ஒன்பது ஆண்டுகள் அவர் சிறையில் செலவிடவேண்டும், அதன் பின் மீதமுள்ள காலகட்டத்தை பொலிசாரின் கண்காணிப்பில் செலவிடவேண்டும்.
அத்துடன், அந்த காலகட்டத்தில் அவர் யாருடனாவது உடல் ரீதியாக பழகுகிறாரா என்பதையும் பொலிசாருக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தீர்ப்பளித்த மாகாண அட்டார்னி, தற்போதைய சூழலில் ஹெச்.ஐ.விக்கு சிகிச்சை உள்ளது என்றாலும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அதன் தாக்கத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.
அதை நிரூபிப்பது போல், Smithஆல் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பெண், மக்கள் தன்னை இப்போதெல்லாம் ஒரு மாதிரியாக பார்ப்பதாகவும், அருவருப்பாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply