
கட்சித் தாவும் அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் எடுபடாது என்பதற்கு அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தக்கச் சான்றாக அமைந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
மண்முனை வடக்குப் பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற இளைஞர் கழகங்களுள் ஒன்றான புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தின் வருட இறுதி கலை நிகழ்வும் சிறுவர் விளையாட்டு பரிசில்கள் வழங்கல் மற்றும் கௌரவிப்புக்கள் என்பன நேற்று (திங்கட்கிழமை) மாலை கழகத்தின் முன்னாள் தலைவரும் ஆலோசகரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான அ.கிருரஜன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மணம் கமழும் விதமாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் சிறார்கள், இளைஞர்களின் விநோத, வித்தியாசமான கலை நிகழ்வுகள் மற்றும் சிறுவர் விளையாட்டுகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் வழங்கல் என்பன இடம்பெற்றன.
நிகழ்வின் விசேட அம்சங்களாக கழகத்தின் முன்னாள் தலைவர்கள் கௌரவிப்பு, பரதநாட்டியத்தில் கிண்ணஸ் சாதனை சான்றிதழ் பெற்ற கழக உறுப்பினர்களுக்கான கௌரவிப்பு, பிரதம அதிதிக்கான கௌரவிப்பு எனப் பல்வேறு விசேட அம்சங்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply